Skip to content

மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்…ஓபிஎஸ் ஓபன் டாக்

 தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக திமுக தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் விழாக்களில் கலந்துகொள்ளும்போதும் கூட வருகின்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்து வருகிறார்கள். அதைப்போல, முதல்வர்  .ஸ்டாலினும் தொடர்ச்சியாக திமுக தான் வரும் தேர்தலில் வெற்றிபெறும் என தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார் அது குறித்து உங்கள் கருத்து என்ன? என கேட்டனர். அந்த கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம் ” மீண்டும் திமுக ஆட்சி வருவதற்கான வாய்ப்பு தான் கண்கூடாக தெரிகின்றது” என பதில் அளித்தார்.

இது குறித்து பேசிய அவர் ” இன்றய சூழ்நிலையில், எல்லா கட்சிகளும் பிரிந்து இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அண்ணா திமுக பிரிந்து இருக்கிறது…அதைப்போல பாமக  பிரிந்து இருக்கிறது. ஐயாவுக்கும்..அன்புமணி ராமதாஸ் சாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் திமுக ஆட்சி வருவதற்கான வாய்ப்பு தான் கண்கூடாக தெரிகின்றது” என வெளிப்டையாக பேசினார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” திமுக தான் இந்த தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், அதற்கு முக்கிய வாய்ப்புகளே எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடைக்கிறது என்பது தான். அப்படி பிரிந்து கிடைக்கும் காரணத்தால் திமுக மீண்டும் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது. அப்படி நான் சொல்லவில்லை பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்” எனவும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

error: Content is protected !!