தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தற்போதுவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அப்படியே 2026 தேர்தலிலும் தொடரும் என அந்தக் கூட்டணி தரப்பில் இருந்து சொல்லப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில், பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
மேலும், தவெக, தேமுதிக, நாதக ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன. இதில், நாதக தனித்துப் போட்டி என வெளிப்படையாக அறிவித்துவிட்டது. அதேபோல், சில தொகுதிகளுக்கும் கூட அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு ராஜேஷ், 2026 திருவெறும்புர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்…

வழக்கறிஞர் நே. மதன் இலால்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்,

இரா.தேன்மொழி, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

