Skip to content

ஊருக்குள் வந்த ஒற்றை காட்டுயானை-பீதியில் பொதுமக்கள

  • by Authour

கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் யானைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால், விவசாயிகளும், பொதுமக்களும் நாளுக்கு, நாள் என்ன நடக்குமோ ? என்று அச்சத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தொண்டாமுத்தூர் பகுதியில் மனிதர்களை தாக்கி கொன்று அச்சுறுத்தலில் ஈடுபட்டு வந்த ரோலக்ஸ் என்கின்ற காட்டு யானையை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

இதை அடுத்து ஆலாந்துறை பகுதியில் ஒற்றைக் கொம்பனும், வரப்பாளையம் பகுதியில் வேட்டையனும் மீண்டும் ஊருக்குள் வரத்து துவங்கியு உள்ளது.

இந்நிலையில் தடாகம், பொன்னுத்தம்மன் கோவில் அடிவாரப் பகுதியில் குட்டியுடன் ஒரு காட்டு யானையும், கதிர் நாயக்கன்பாளையம் லட்சுமி நகர், ரேணுகாபுரம், பேஸ் 3, கிளாசிக் வில்லேஜ், அக்ஷயா பள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு உணவு தேடி புகுந்த ஒற்றைக் காட்டு யானையை பார்த்து அப்பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் குரைத்து சத்தம் எழுப்பியது. அதனையும் கண்டுகொள்ளாமல் குடியிருப்பு பகுதிக்கு வந்த யானை அங்கு ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட செடியின் கிளையை முறித்து சத்தம் போடாத அடித்து போடுவேன் என்ற தோணியில் கீழே போட்டு சென்று அப்பகுதியில் நீண்ட நேரம் உணவு தேடி நின்றது. அது அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் அங்கு இருந்த சிறுவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகளும் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்பகுதியில் வரும் அந்த ஒற்றை காட்டு யானையை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

error: Content is protected !!