கரூரில் சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி விபத்து – அதிஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை: போலீசார் விசாரணை.
குளித்தலையிருந்து புறப்பட்ட அரசு தாழ்தளப் பேருந்து கரூர் பழைய பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக பழனி நோக்கி சென்ற தனியார் பேருந்து, சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் பேருந்தின் முன்பக்கம் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.
மேலும் அரசு தாழ்தளப் பேருந்தின் பின்பக்கம் சேதமடைந்தது. இதனால் இரண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவசரமாக பேருந்தை விட்டு கீழே இறங்கிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் நிலைய போலீசார் இரண்டு பேருந்துகளையும், விசாரணைக்காக காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

