Skip to content

திருப்பத்தூர் அருகே தொடர் கஞ்சா விற்பனை… வாலிபர் கைது

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை செய்வதாக திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் டிஎஸ்பி தனி படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ரயில் நிலையம் அருகே உள்ள புத்துமாரியம்மன் கோயில் பகுதியில் முட்புதர்களின் மறைவில் ஒரு கிலோ கஞ்சாவை சிறிய பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்து விற்பனை செய்ய 2வாலிபர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் தனிப்படை போலீசார் சென்றபோது இருவரும் தப்பி ஓடி உள்ளனர். பின்னர் அவர்களை விரட்டி பிடித்ததில் ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

மேலும் பிடிபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் வாலிபரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் பாச்சல் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் தமிழரசன் (26) மற்றும் மூக்குத்தி வட்டம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ரஞ்சித் (21) என்பதும், இவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் மாவட்டம் தமிழக ஆந்திர எல்லையில் இருந்து பச்சூர் பகுதியில் கஞ்சாவை வாங்கி பின்னர் அவற்றை சிறிய பாக்கெட்டுகளாக தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து இதில் தமிழரசன் என்பவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய ரஞ்சித் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!