Skip to content

சி.சுப்பிரமணியத்தின் 25ம் ஆண்டு நினைவு தினம்.. காங்., கட்சியினர் மரியாதை

  • by Authour

கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரமான விவசாயம் செழிக்க பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் கொண்டு வந்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான சி.சுப்பிரமணியம் 25-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி-உடுமலை சாலை சின்னாம்பாளையத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட அலுவலக வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியத்தின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பொள்ளாச்சி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் என்.கே.பகவதி கலந்து கொண்டு சி.சுப்பிரமணியம் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சாந்தலிங்கம், மாவட்ட துணைத்தலைவர்கள் பத்ரகிரி,மாசிலாமணி,சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் வீராசாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவிஅஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!