Skip to content

பிங்க் நிற ஆட்டோ… ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்… எச்சரிக்கை

  • by Authour

சென்னை : மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜக்தாப், பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட “பிங்க் ஆட்டோ”க்களை ஆண்கள் இயக்கினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்களின் பொருளாதார சுயசார்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கிக் கடன் உதவியுடன் பெண்களுக்கு மட்டுமே பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கியது. இவற்றை ஆண்கள் இயக்குவது முற்றிலும் தவறு என்று ஆட்சியர் தெரிவித்தார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டி வருவதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து போக்குவரத்து மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல ஆட்டோக்கள் ஆண்களால் இயக்கப்படுவது உறுதியானது. இதனால் பெண்களுக்கான திட்டத்தின் நோக்கமே பாதிக்கப்படுவதாக ஆட்சியர் கவலை தெரிவித்தார்.பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் இயக்குவது கண்டறியப்பட்டால் உடனடியாக வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்தார்.

மேலும், இந்த ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையை மீறினால் மானியத் தொகையை திரும்பச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட பிங்க் ஆட்டோ திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை முழுவதும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை உடனடியாக தெரிவிக்குமாறும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்த எச்சரிக்கை பிங்க் ஆட்டோ உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!