அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த காரைகாட்டான்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராம்குமார் (28) இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியில் வந்தவர் பின்பு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று தா பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ராம்குமார் தலை மற்றும் முகம் நசுங்கிய நிலையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தா பழுர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த இளைஞர் ராம்குமார் தலையில் பலத்த ரத்த காயங்களுடன் மற்றும் முகம் நசுங்கிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்ததால் இறந்த இளைஞரை மர்ம நபர்கள் மூலம் வரவழைக்கப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

