டில்லியில் நேற்று மாலை செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 9 பேர் பலியான நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகளை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும்

வகையில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி நகரின் முக்கிய வீதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் வேற்று மாநில
பதிவெண் கொண்ட வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

