தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநில வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் எனப்படும் SIR பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்த வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் SIR பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்தும் முயற்சினை கைவிட வேண்டும் எனக் கூறி என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை ஊராட்சி செயலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைட்டு கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தனி அலுவலர் மூலம் ஊராட்சி நிர்வாகம் நடைபெற்று வருவதாகவும், மேலும் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான வரி வசூல் செய்யும் நடவடிக்கைகள், ஊராட்சி பணிகளை கண்காணிப்பு உள்ளிட்ட வேலை பளு அதிகமாக இருப்பதாகவும், இதற்கு இடையே SIR பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்த முனைப்பு காட்டுவதால், மற்ற ஊராட்சி பணிகள் பாதிக்கப்படும் எனவும், எனவே ஊராட்சி செயலாளர்களை SIR பணியில் ஈடுபடுத்து முயற்சியினை முற்றிலுமாக கைவிட வேண்டும் எனக் கூறினர்.
SIR பணியை கைவிடக்கோரி… பொள்ளாச்சியில் கோரிக்கை மனு
- by Authour

