அரியலூர் அண்ணா சிலை அருகில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு S.I.R எதிர்த்து,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர்
சுபா.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கழகத் துணைப் பொதுச்செயலாளர், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி என்.சிவா மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாவட்ட செயலாளர்கள், திமுக மாநில,மாவட்ட,ஒன்றிய, நகர,பேரூர் கழக நிர்வாகிகள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தோழர்கள் கலந்துகொண்டனர்.

