Skip to content

திருச்சியில் அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

  • by Authour

திருச்சியில் அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது..

இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

அதில் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடைய இல்லங்களில் வெடிகுண்டு

வைத்துள்ளதாகவும் இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என் நேருவின் வீடு மற்றும் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் மகேஷ் வீடு ஆகிய இடங்களில்

தீவிர சோதனை செய்தனர்.

வீடுகளில் அமைச்சர்களின் கார்கள் அமைச்சர் வீடுகள் இருந்த மற்ற வாகனங்கள் சமையலறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளைக் கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் வதந்தி என்பது தெரியவந்தது .

மின்னஞ்சல் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை தீவிர மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சென்னையில் அமைச்சர் சேகர்பாபு வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாடகி சின்மயி வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சமீபகாலமாக அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் சினிமா நடிகர் நடிகைகள் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்ற செய்தி தொடர் கதையாக இருந்து வருகிறது.

error: Content is protected !!