தமிழர் தேசம் கட்சியின் சார்பில் வருகிற ஜனவரி 25 -ந் தேதி திருச்சியில் முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று(புதன்கிழமை) திருச்சியில் நடந்தது.
தமிழர் தேசம் கட்சியின் தலைவரும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவருமான கே கே செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில அமைப்பு செயலாளர் மகுடேஸ்வரன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் துரைகுணசேகரன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில அமைப்பாளர் கள்ளிக்குடி எம். ராஜேந்திரன், கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் வள்ளல், வழக்கறிஞர் கௌதம் மணி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கேகே செல்வகுமார் பேசும்போது, வருகிற ஜனவரி 25ஆம் தேதி திருச்சியில் முத்தரையர் அதிகார மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் வெற்றியின் மாநாடாக அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் புதிய நிர்வாகிகளை அவர் அறிமுகம் செய்தார்.

