Skip to content

50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொளுத்திய கரும்பு விவசாயிகள்

  • by Authour

கர்நாடகாவில் அதிகரித்து வரும் விலைவாசியை முன்னிட்டு, கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக முதலில் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய தலைவர்களுடன் முதல்-மந்திரி சித்தராமையா அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தினார். இதுபற்றி பிரதமர் மோடிக்கும் கடிதம் ஒன்றை எழுதினார்.
இந்நிலையில், விலை உயர்வில் எந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெலகாவியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கற்களை வீசி எறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சமீபத்தில், கர்நாடக சர்க்கரை துறை மந்திரி சிவானந்த் பாட்டீல் பாதுகாப்பு வாகனம் மீது பெலகாவியில் காலணி ஒன்றும் வீசப்பட்டது. இந்த நிலையில், பாகல்கோட் பகுதியில் கோதாவரி சர்க்கரை ஆலை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கரும்பு விவசாயிகள் தீ வைத்து கொளுத்தினர்.

error: Content is protected !!