திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கோனாப்பட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் (61) திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நிலையில்,
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் லாட்டரி விற்பனையை சைடு பிசினஸ் ஆக செய்து வந்துள்ளார்.
இது குறித்து திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் டி.எஸ்.பி தனிப்படை போலீசார் விசாரணை நடேசனின் செல் போன் என்னை வைத்து லொகேஷன் பார்த்து உள்ளனர்.
அப்போது கேரளாவிற்கு சென்று லாட்டரி சீட்டு வாங்கி கொண்டு திருப்பத்தூர் திரும்பியது தெரியவந்த நிலையில் திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் இறங்கிய நபரை அலேக்காக வண்டியில் அமர வைத்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த போது தடை செய்யப்பட்ட 200 கேரளா லாட்டரி சீட்டு இருப்பதை கண்டு அனைத்தையும் பறிமுதல் செய்து நடேசனையும் கைது செய்தனர்.
பின்னர் உடல் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலிசார் அழைத்து சென்ற நிலையில் அப்போது அதனை செய்தியாளர்கள் படம் பிடித்ததும் கையில் வைத்து இருந்த பச்சை துண்டை வைத்து முகத்தை மறைத்து கொண்டு நான் என்ன கொலையா செய்து விட்டேன் என்று திமிராக பேசி சென்றார். கையில் பச்சை துண்டு, வெள்ளை நிற ஆடை, திமுக கட்சி வேட்டி அணிந்து கொண்டு லாட்டரி விற்பனை செய்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்து விற்பனை செய்ய திருப்பத்தூர் இறங்கியரை போலிசார் அள்ளி சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

