குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா பேரணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி திண்டுக்கல் சாலை, காளியப்பகவுண்டனூர் வழியாக சென்று அரசு கலைக் கல்லூரியில் முடிவடைந்தது. இப்பேரணியில் கல்லூரி, நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் தலைமையில் குழந்தைகள் தின உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி பரத்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

