கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சி புதூரில் கடந்த மாதம் 27ம் தேதி வனப்பகுதி விட்டு வெளியே வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கன்று குட்டி, கிடா ஆடு தாக்கிக் கொன்றது.அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் வனத்துறையினர் தனியார் தோட்டங்களில் இரண்டு கூண்டுகள் வைத்து சிசிடிவி கேமரா மற்றும் வனத்துறை கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில் மீண்டும் சிறுத்தை நேற்று முன்தினம் இரவு சுமதி என்பவர் தோட்டத்தில் வளர்த்து வந்த ஐந்து மாத ஆன கன்று குட்டியை அடித்துக் கொன்றது அச்சம் அடைந்த விவசாய குடும்பத்தார் வனத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபால முருகன் தலைமையில் கால் தடையகளை வைத்து பார்த்த பொழுது சிறுத்தை அடித்தது தெரியவந்தது. இதை அடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பெயரில் உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகு பகுதியில் இருந்து மேலும் ஒரு கூண்டு கொண்டுவரப்பட்டு இறந்த கன்று குட்டியின் உடலை வைத்து சிறுத்தை கண்காணித்து வருகின்றனர் .வனத்துறையினர் தோட்டத்து உரிமையாளர் சுமதி கூறுகையில் தன் குடும்பத்தில் ஒரு பெண் போல கன்று குட்டி வளர்த்து வந்ததாகவும் அதற்கு வெண்ணிலா என பெயர் சூட்டி உள்ளனர் தோட்டத்து சாலையில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் வெளியே வர முடியாமல் அச்சத்துடன் இருக்கிறோம் மேலும் குழந்தைகள் முதியோர்கள் தோட்டப்பகுதியில் அதிகம் இருக்கிறார்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காரணமாக இருப்பதாகவும் விரைந்து சிறுத்தை பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அம்மன் கோவில் அருகில் இருக்கும் தோட்டத்தில் விவசாயி ஆனந்தன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது சிறுத்தை தாக்கி படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
குழந்தை மாதிரி வளர்த்த கன்றுக்குட்டி.. சிறுத்தை தாக்கி பலி.. விவசாய குடும்பம் வேதனை
- by Authour

