உலக அதிசயம் என்பது உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அதிசய பொருள் கிடைக்கும் அல்லது அதிசய நிகழ்வுகள் நடைபெறும். இதே போல தான் உலகத்தில் வேறு எங்கும் கிடைத்தற்கு அரிய விநாயகர் உருவம் கொண்ட பப்பாளி பழம் கிடைத்தது.
இந்த அரிய பொருள் கோவை மாவட்டம் போள்ளாச்சி அடுத்த திவான்சாபுதூர் பகுதியைச் சார்ந் சுப்பிரமணியம் என்ற விவசாயிக்கு கிடைத்தது. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வழக்கம்போல தனது தோட்டத்தில் பப்பாளியை பரிக்கச் சென்றபோது பப்பாளியில் விநாயகர்

உருவம் கொண்ட அதிசய பப்பாளி கிடைத்தது மேலும் இதுபோன்ற பப்பாளி பழத்தில் விநாயகர் உருவம் தோன்றியதால் இனி வரும் காலங்களில் விவசாயம் செழிப்படையும் என்ற உற்சாகத்துடன் பப்பாளி பழத்தில் தோன்றிய விநாயகர் உருவத்திற்கு விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து மணி ஓசையுடன் தீபாராதனை காட்டி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வழிபட்டனர்.மேலும் அப்பகுதி பொதுமக்கள் அதிசய நிகழ்வு பப்பாளியை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

