அரியலூர் மாவட்டம் பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்றதோடு ஆய்வக தொழில்நுட்ப படிப்பும் முடித்து தற்பொழுது மரணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே ஐந்தாண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய இவர் தனது 5 வயதிலேயே தந்தையை இழந்த காரணத்தினால் கல்வியை தொடர தனது ஆசிரியர்கள் ஊக்குவிப்பின் காரணமாகவும் அவர்கள் செய்த உதவிகள் நல்ல நிலைமைக்கு வந்ததால் தானும் ஆசிரியராக வேண்டும் என்ற நோக்கில் ஆசிரி

யர் பயிற்சி முடித்து தற்பொழுது ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இயற்கையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இதுவரை 43 மலைப்பயணங்களை மேற்கொண்டுள்ளார் பழனிச்சாமி. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வரை 303 கிலோ மீட்டர் தூரத்தில் மிதிவண்டியில் பயணித்து இயற்கையை காப்போம் மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார். தற்பொழுது இரண்டாம் கட்டமாக இன்று

அரியலூர் மாவட்டம் பரணம் கிராமத்திலிருந்து ராமேஸ்வரம் வரை மிதிவண்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இவர் செல்லும் வழிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இயற்கையும் பிரபஞ்சத்தையும் காக்க மரம் நடுவதன் அவசியத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு வழிநெடுகிலும் மரங்களை நட்டும் செல்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரணம் பழனிச்சாமி, இயற்கையின் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக நான் இதுவரை 43 மலைப் பயணங்களை மேற்கொண்டேன். தற்பொழுது ஆசிரியர் பணியாற்றி வரும் எனது பள்ளியில் மாணவர்களின் பிறந்தநாள் அன்று அவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து ஒவ்வொருவரையும் அதனை வளர்க்க சொல்லி வருகின்றேன். முதல் கட்டமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மிதிவண்டி விழிப்புணர்வுக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டேன். இரண்டாம் கட்டமாக இன்று பயணத்திலிருந்து ராமேஸ்வரம் வரை மிதிவண்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன். எனது பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதற்காக மரங்களை நட வேண்டும் இன்றைய நவீன உலகில் வாகனங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது இதனால் வெப்பம் அதிகமாகி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது இதற்கு மரங்களை அதிகம் நடுவதே தீர்வு. தமிழ்நாட்டில் உள்ள ஆறு கோடி மக்களும் அவரவர் ஒரு மரக் கன்றை நட்டால் 6 கோடி மரம் உருவாகும் இதுபோன்று ஒவ்வொருவரும் தனது பிறந்தநாள் தனது பிடித்த தலைவர்கள் பிறந்தநாள் உள்ளிட்ட நாட்களில் மரக்கன்றுகளை நட்டு இயற்கையை பிரபஞ்சத்தையும் பாதுகாக்க வேண்டும் மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற நோக்கத்தை வழிநெடுக்கிலும் உள்ள கிராமப்புற மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் மரக்கன்றுகளை நட உற்சாகப்படுத்தி நானும் செல்லும் வழியில் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன் இதற்கு எனது குடும்பத்தினரும் மிகுந்த ஆதரவளித்து வருகின்றனர் எனது பயணம் தொடரும் என்று கூறினார்.
பரணம் பழனிச்சாமி இயற்கை விழிப்புணர்வை மற்றும் ஏற்படுத்தாமல் தனது சொந்த கிராமத்தில் அவருக்கு சொந்தமான இடத்தில் நண்பர்கள் உதவியுடன் தனது தாயாரின் பெயரில் ஆரஞ்சு அம்மாள் நல்வழி பயிற்சி மையம் என்ற பயிற்சி மையத்தையும் உருவாக்கியுள்ளார் இதில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு நேரடியாக டிஎன்பிசி தேர்வுகள் மற்றும் காவலர் தேர்வுகளுக்கு தானே பயிற்சியும் அளித்து வருகிறார். கிராமப்புற மாணவர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அதிகம் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காகவே இந்த பயிற்சி மையத்தை தான் நடத்தி வருவதாகவும் கூறுகின்றார். பழனிச்சாமியின் இத்தகைய முயற்சிக்கு அவரது கிராம மக்களும் நண்பர்களும் ஆதரவு அளிப்பதோடு ஒவ்வொரு பயணத்தை தொடங்கும் பொழுதும் அவர்கள் உற்சாகப்படுத்தி வழி அனுப்பி வருகின்றனர்.

