Skip to content

அரியலூர்- மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

  • by Authour

ஐயப்ப சுவாமிக்கு கார்த்திகை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். இதனையொட்டி கார்த்திகை மாதத்தின் முதல் தேதியான இன்று அரியலூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் மற்றும்

ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து குருசாமி தலைமையில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களுடன் சிறியவர்கள், பெரியவர்கள், கன்னிசாமிகள் என திரளான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். இதேபோல்

அரியலூர் நகரில் உள்ள மங்காய் பிள்ளையார் கோவில், பேருந்து நிலையம் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள

கோவில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். வழக்கத்தை விட இந்த ஆண்டு மாலை அணியும் ஐயப்ப பக்தர்களின்

எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது குறிப்பிடப்பட்டது.

error: Content is protected !!