Skip to content

தமிழகத்தில் தொழில் துவங்க இடவசதி இல்லை- ஆனாலும் இடம் தருகிறோம்

  • by Authour

திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் தேர்தல் ஆயத்த பணிகள் வாக்காளர் பட்டியல் பிறப்பு தீவிர சீராய்வு பணிகள் குறித்த நிர்வாகிகளான ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப் பெருந்தகை…..

தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் முன்னேறி உள்ளது என எடப்பாடி பழனிச்சாமியிடம் சவால் வீட்டுள்ளீரகளே, எந்த வகையில் தமிழகம் முன்னேறியுள்ளது என கேட்டபோது…. எல்லா வகையிலும் முன்னேறியுள்ளது, கடந்த 4 ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் முதலீடு வந்ததையும் இந்த 4 ஆண்டுகளில் வந்த முதலீடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்களுடைய ஆட்சியில் என்னென்ன தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளன இந்த ஆட்சியில் எந்தெந்த தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளன என்ற புள்ளி விவரத்தை நாங்கள் தருகிறோம். அவர்களையும் புள்ளி விவரங்களை தர சொல்லுங்கள்.

இவர்களது திறமையற்ற ஆட்சியால் தான் போர்டு நிறுவனம் மூடி விட்டு சென்றனர். மூடிவிட்டுச் சென்ற போர்டு நிறுவனம் திமுக ஆட்சியில் மீண்டும் துவங்குவதற்கு முன் வந்துள்ளனர். இதைவிட என்ன முன் உதாரணம் வேண்டும் என்றார்.

கூகுள் , கொரிய நிறுவனம் என வரிசையாக தமிழகத்தில் தொழில் துவங்காமல் ஆந்திராவிற்கு செல்கிறதே என கேட்டபோது….. கூகுள் எதற்காக ஆந்திராவிற்கு சென்றது என்பது தெரியும், கூகுள் போன்ற பல நிறுவனங்கள் மைக்ரோசாப்ட் , ஐ போன் கம்பெனி, பென்ஸ், ஹூண்டாய், செயிண்ட் கோபெயின் இதெல்லாம் யார் காலத்தில் வந்தது, டாட்டா சோலார் வந்துள்ளது. இது போன்ற பிரம்மாண்டமான தொழிற்சாலைகள் வருகிறது. நைக் ஷூ இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பல தொழிற்சாலைகளுக்கு இடம் கொடுக்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. தொழில் துவங்க என்னுடைய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சிப்காட்டில் இடம் இல்லை, திண்டிவனம், அரக்கோணம், வாணியம்பாடி, ராணிப்பேட்டை போன்ற இடங்களுக்கு செல்லுங்கள் என கூறும் நிலை உள்ளது.

பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்க தயாராக உள்ளனர். இடவசதி இல்லாமல் உள்ளது இருப்பினும் இடமளித்து வருகின்றனர். எந்த விதத்தில் பின் தங்கியுள்ளோம் நாம் என்றார் .

ஜிடிபி யில் ஒன்றிய அரசை விட தமிழக அரசு உயர்ந்து உள்ளது. பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளது, எலக்ட்ரானிக் பொருட்கள் கைபேசி, செல்போன் ஏற்றுமதியில் முதல் மாநிலம் இந்த நாட்டில் தமிழகம் தான் . இதெல்லாம் அதிமுக ஆட்சியில் இல்லை .

ஜிஎஸ்டி வருவாய் கொடுப்பதில் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழகம். அவருடைய ஆட்சியில் நாம் எத்தனையாவது ஆக இருந்தோம் எனக் கூறச் சொல்லுங்கள் .

ஒன்றிய அரசு மாநில அரசுக்கு விருது வழங்குகிறார்கள் அல்லவா இவர்கள் ஆட்சியில் எடப்பாடி எத்தனை விருதை வாங்கியுள்ளார் என கேள்வி எழுப்பினார்.

நீங்கள் இவ்வளவு விவரமாக புள்ளி விவரங்களோடு கூறுகிறீர்கள் ஆனால் இந்தத் துறை அமைச்சர் வெறும் வெள்ளை பேப்பரை காட்டி விட்டு செல்கிறாரே எனக் கேட்டபோது….. அவருக்கு வெள்ளை பேப்பருக்கும் புள்ளி விவரத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை. முன்னால் முதல்வர் எடப்பாடியார் இதை எல்லாம் படித்துவிட்டு வர சொல்லுங்கள் நானும் எடுத்து வருகிறேன் உட்காரலாம் என்றார்.

நான் கூறியது தற்போதைய தொழில்துறை அமைச்சர் ராஜா பற்றி என நிருபர் கூறியதும்……. அவர்தான் புள்ளி விவரங்களுடன் கொடுத்துள்ளாரே, முதலமைச்சரும் கொடுத்துள்ளாரே , எங்களது காலத்தில் எவ்வளவு முதலீடு வந்துள்ளது, இது எல்லாம் பேப்பர் முதலீடு கிடையாது. நான் அந்த தொகுதியில் எம்எல்ஏ ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது, எத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் வந்துள்ளது என்பது எனக்கு தெரியும்.

எடப்பாடியை ஒருநாள் வரச் சொல்லுங்கள் அவர் ஆட்சியில் இருந்ததையும் காட்டுகிறேன் அதற்குப்பின் தற்பொழுது திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் எந்தெந்த தொழிற்சாலைகள் வந்துள்ளது என்னென்ன தொழிற்சாலைகள் வந்துள்ளது எத்தனை ஆயிரம் முதலீடுகள் என எனது காரில் அழைத்துச் சென்று காட்டுகிறேன் என்றார்‌.

சீமான் காங்கிரசை அழிப்பது தான் எனது வேலை எனக் கூறியுள்ளாரே….. இது போன்று சொன்னவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். முக்த் பாரத் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று ஒருத்தர் சொன்னார் ஆனால் எங்கோ ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது அல்லவா… கர்நாடகாவில் எங்களது ஆட்சி, தெலுங்கானாவில் எங்களது ஆட்சி, ஹிமாச்சல், ஜார்கண்ட் ஆகிய இடங்களில் எங்களது ஆட்சி உள்ளது. முக்த் பாரத் எல்லாம் செய்ய முடியாது. 140 ஆண்டுகளாக கிழக்கிந்திய கம்பெனியும் பிரிட்டிஷ்காரர்களும் காங்கிரசை அழித்து விடுவோம் ஒழித்து விடுவோம் என்றார்கள். ஆனால் அகிம்சை வழியில் விடுதலை பெற்ற கட்சி காங்கிரஸ் பேரியக்கம். 140 ஆண்டுகளாக கொக்கரித்து விட்டு சென்றவர்கள் தான் அனைவரும். கிட்ட கூட வர முடியாது எங்களது சித்தாந்தம் வலிமையான சித்தாந்தம் என்றார்.

பீகார் தேர்தல் தோல்விக்கு பிறகு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள் கூடுதல் தொகுதி கேட்கும் எண்ணம் உண்டா என்றபோது…. தொகுதிகள் பேச்சுவார்த்தை எல்லாம் எங்கள் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்றார்.

error: Content is protected !!