திருச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்…. இன்று வரும் தேர்தல் குறித்து ஆலோசனை செய்தோம். பூத் கமிட்டி குறித்து ஆலோசனை செய்தோம். எங்கள்
கூட்டணி கட்சிகளின் பெருமையும் அதனால் ஏற்படப்போகும் நன்மையை குறித்து எடுத்துரைத்தேன். ஏன் கூட்டணி என்பது குறித்து விளக்கி உள்ளேன். நாங்கள் வைத்துள்ள கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து சில கருத்துக்களை கூறுகிறார்கள். எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து உங்களிடமா பேசுவது என கூறி சென்றார்.

