திருச்சி திருவானைக்காவல் கணேசபுரத்தை சேர்ந்தவர் சோலை ராஜன் (57) இவர் திருவரங்கம் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 17 ந்தேதி இவர் திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை வெள்ளாளர் தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் பழுது பார்க்க ஏறினார்.அப்பொழுது அவர் சுமார் 15 அடி உயரத்தில் ஏறிய பொழுது திடீரென்று தவறி கீழே விழுந்தார்.இந்த சம்பவத்தில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சோலை ராஜன் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சோலை ராஜன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சோலை ராஜின் மனைவி பரமேஸ்வரி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விடுதியில் சீட்டு விளையாடிய 6 பேர் கைது.. பணம் மற்றும் டூவீலர் பறிமுதல்
திருச்சி நவ 19- திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சீட்டு விளையாட வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதையடுத்து இன்ஸ்பெக்டர் திருவனந்தம் தலைமையில் போலீசார் அந்த விடுதிக்கு சென்று அறையில் சோதனை நடத்தினர். அப்பொழுது ஒரு அறையில் ஆறு பேர் கொண்ட கும்பல் அமர்ந்து சீட்டு விளையாடி கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் திருவனந்தம்
தலைமையிலான போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஜீயபுரம் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் ( 34 ) லால்குடியை சேர்ந்த ஆன்டோ ஜாக்சன் ரோஸ் (வயது 35), சங்கர் (46), சரவணன் ( 33), டோல்கேட் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 29), காட்டூர்ரை சேர்ந்த சதீஷ்குமார் ( 35) ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 22 ஆயிரத்து 150 பணம் மற்றும் 152 சீட்டுகள்,மூன்று டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து6 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

