Skip to content

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்

  • by Authour

ஆந்திராவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை ஜனாதிபதி திரெளபதி முர்மு  4 மணியளவில் ரேணிகுண்டா வந்திறங்கினார். அங்கு, ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆந்திர மாநில மந்திரி வங்கலப்புடி அனிதா, திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கடேஸ்வர், போலீஸ் ஐ.ஜி.ராஜகுமாரி, திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, திருப்பதி தொகுதி எம்.பி. குருமூர்த்தி, ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பொஜ்ஜல.சுதீர்ரெட்டி ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.

அதன்பிறகு ஜனாதிபதி ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு பலத்த பாதுகாப்போடு திருப்பதி வழியாக திருச்சானூருக்கு சென்றார். அங்கு, பத்மாவதி தாயார் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அதிகாரிகள் லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கினர்.

அதன்பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்மு திருச்சானூரில் இருந்து காரில் புறப்பட்டு திருமலையை அடைந்தார். அங்கு, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இதையடுத்து ஜனாதிபதி, திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார்.

இன்று காலை திருமலை பாரம்பரிய முறைப்படி வராக சாமி கோயிலில் வழிப்பட்டு பின்னர் ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு கோயில் நுழைவு வாயிலில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு, ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம நாராயண ரெட்டி, இ.ஓ. அனில்குமார் 
சிங்கால் முன்னிலையில் இஸ்தி கப்பால் மரியாதையுடன் வரவேற்று சாமி தரிசனம் செய்து வைத்து ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். 

இதனையடுத்து ராம்பகிஜா பஸ் ஸ்டாண்ட் அருகே வந்த போது அங்கிருந்த பக்தர்களை பார்த்த முர்மு  காரில் இருந்து கீழே இறங்கி பக்தர்களிடம் சிறிது நேரம் உரையாடி அங்கிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட்டுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து  பிற்பகல் 12 மணிக்கு திருப்பதியில் இருந்து ஐதராபாத் சென்றார்.

error: Content is protected !!