வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக்கில் இந்திய ‘ஏ’ அணி, ஓமனுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஓமன் 7 விக்கெட்டுக்கு 135 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய ‘ஏ’ அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக ஜொலித்த ஹர்ஷ் துபே 53 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். வைபவ் சூர்யவன்ஷி 12 ரன்னில் கேட்ச் ஆனார். 3-வது லீக்கில் ஆடிய இந்திய ‘ஏ` அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த பிரிவில் ஏற்கனவே பாகிஸ்தான் (3 வெற்றியுடன் 6 புள்ளி) அரையிறுதியை எட்டியுள்ளது.

