சாலை ஓரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம்!. போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம், அனுமந்தஉபாசகர் தெரு பகுதியைச் சேர்ந்த ஶ்ரீதர் (40) என்பவர் அவருக்கு சொந்தமான காரில் ஊத்தங்கரை சென்று விட்டு வீடு திரும்பும் போது
திருப்பத்தூர், அண்ணாநகர் அருகே அதிவேகமாக கார் சென்ற நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் சாலை ஓரம் நிறுத்தி உள்ளார் அப்போது அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கார் 2 முறை புரண்டுள்ளது.
காரில் பயணம் செய்த லிங்கேஸ்வரி, செல்வகுமாரி, தீரன் ஆகியோருக்கும் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் நித்திஷ், தங்கை நிரோஷா ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கார் மோதியதில் நிரோஷவிற்கு மட்டும் தலையில் 7 தையல் போடப்பட்டுள்ளது.
மற்ற 4 பேருக்கும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

