சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சனா பட்நாயக், “SIR விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் விண்ணப்பிக்க போதுமான அவகாசம் தரப்பட்டுள்ளது. விசாரணை இல்லாமல் எந்த வாக்காளர் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. நீக்கப்பட்டால் உரிய காரணம் தெரிவிக்கப்படும். டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் SIR படிவங்களை திரும்ப அளிக்க வேண்டும். காலக்கெடு நீட்டிக்கப்படாது. தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட SIR படிவங்களில் 50 சதவீதம் திரும்பப்பெறப்பட்டுள்ளன. அவற்றை கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை 6.16 கோடி பேருக்கு SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை படிவங்கள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். சர்ரியான தகவல்களை கொண்ட எந்த படிவமும் நிராகரிக்கப்படாது. தமிழகம் முழுவதும் 68ஆயிரம் BLOக்களுடன் SIR பணி நடைபெறுகிறது. படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிக்கும் பிற மாநிலத்தை சேர்ந்த 869 பேர் வாக்காளர்களாக இணையம் வழியாக விண்ணப்பித்துள்ளனர். வெளி மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்துள்ளவர்கள் படிவம் 8ஐ கொடுத்து வாக்காளர்களாக இணையலாம். SIR ஆன்லைன் சர்வர் சரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வழங்குவதாக குற்றச்சாட்டு வைப்பது தவறானது” என்றார்.

