வேலூர் மாவட்டம், வேலூர் அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை (பென்ட்லான்ட்) அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்து நேற்று பிறந்த குழந்தை பெண் பச்சிளம் குழந்தையின் சடலம் இருப்பதாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் வந்த காவல்துறையினர் கழிவுநீர் கால்வாயில் இருந்த பெண் பச்சிளம் குழந்தையை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கழிவு நீர் கால்வாயில் பெண் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார் என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு
- by Authour

