விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 2வயது குழந்தை வாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. வாளி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கிய குழந்தையை மீட்டு தாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

