மணிக்கு 10 கிமீ வேகத்தில் டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 4 மாவட்டங்களான, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினத் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக மதியம் விடுமுறை அளித்து புதுக்கோட்டை கலெக்டர் மு.அருணா உத்தரவிட்டுள்ளார்.மேலும் மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 4 மாவட்டத்திற்கும் பேரிடம் மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளனர்.

