டிட்வா புயல் தற்போது சென்னைக்கு 530 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டு இருக்கிறது. இந்நிலையில் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 10 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது வருகிற 30-ந்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வௌ்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, தேனி , திண்டுக்கல் , புதுக்கோட்டை, கரூர் , திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கைக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

