டிட்வா புயல் கனமழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடியில் இருந்து 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தஞ்சை வந்துள்ளனர்
டிட்வா புயல் மையம் கொண்டு உள்ளதால், காவிரி படுகை மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர் சார்பு ஆய்வாளர் அனுசுயா தலைமையில் தஞ்சை வந்துள்ளனர்
மிதவை பாலம், ஜெனரேட்டர், மரம் அறுக்கும் எந்திரம், டார்ச் லைட், உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் உடன் தயார் நிலையில் உள்ளனர்.
வருகிற 30ம் தேதி வரை தஞ்சையில் இருக்கும் மீட்பு படையினர் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அந்த பகுதிகளுக்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தெரிவித்த மீட்பு படை குழு தலைவர் அனுசுயா
ஆபத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு முதலுதவி அளித்து மீட்கவும், வெள்ளத்தால் சூழ்ந்து வீடுகளில் தவிக்கும் மக்களை மீட்டு கொண்டு வர மிதவை படகு, மரங்கள் சாய்ந்து போக்குவரத்து தடைபடாமல் இருக்க மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து மீட்பு உபகரணங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

