Skip to content

டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. உயிர்தப்பிய 140 பேர்

  • by Authour

அகமதாபாத் சென்ற ஏர் இந்தியா விமானம் தீ விபத்து எச்சரிக்கை காரணமாக பாதியிலேயே டெல்லிக்கு திரும்பியது. டெல்லியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு நேற்று இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் சுமார் 170 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, விமானத்தின் சரக்குகள் வைக்கும் பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறுவது போன்ற அபாய எச்சரிக்கை விமானியின் அறையில் ஒலித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட விமானிகள், இதுகுறித்து டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரினர்.

அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரவு 10.20 மணியளவில் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பொறியாளர்கள் நடத்திய விரிவான சோதனையில், ‘சரக்கு இருப்பு அறையில் புகை வந்ததாகக் காட்டியது, தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட பொய்யான எச்சரிக்கை’ என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் அகமதாபாத் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் விசாரணை செய்து வருகிறது.

error: Content is protected !!