Skip to content

துணை முதல்வர் பிறந்தநாள்.. புதுகையில் 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

  • by Authour

புதுக்கோட்டை யில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை புதுக்கோட்டை அரசு இராணி யார் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிறந்த 20குழந்தைகளுக்கு
தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதிபங்கேற்று குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணிதுணைத்தலைவர்இராசு.கவிதைப்பித்தன்,புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, பொருளாளர் எம்.லியாகத்தலி, மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, ஒன்றிய திமுக செயலாளர் மு.க.ராமகிருஷ்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் கணேஷ் ,மாநகராட்சி உறுப்பினர்கள் சுப.சரவணன்,செந்தாமரைபாலு, மாநகர செயலாளர் ராஜேஷ், கழக நிர்வாகிகள் செ.மணிமாறன், ராமச்சந்திரன்,அப்புக்காளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!