ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடிக்கு மேல் மலை மீது அமைந்துள்ள பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி தாடகை நாச்சியம்மன் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகாதீபம் ஏற்றப்படும்.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் மலைகளின் மீது மகா தீபம் ஏற்ற பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக இந்த தாடகை நாச்சியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றுவதற்காக உள்ளூர் மட்டுமின்றி கோவை ஈரோடு சேலம், மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்துள்ளனர்.
மேலும் மருத்துவ பரிசோதனை மற்றும் முன் அனுமதி பெற்ற நபர்களை வனத்துறையினர் சோதனை செய்த பிறகு அனுமதி அளித்தும் மேலும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும் நெகிழி பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது எனவும் வனவிலங்குகளை கண்டால் அவைகளை துன்புறுத்துவதோ அருகில் சென்று புகைப்படங்கள் எடுக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தி பக்தர்களை அனுப்பி வருகின்றனர்.
இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, காட்டு மாடு ,புலி சிறுத்தை , போன்ற வனவிலங்குகள் அதிகமாக இருப்பதால் மலை மீது உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடி உயரத்தில் உள்ள இந்த தாடகை நாச்சியம்மன் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் நடைபெறும் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

