Skip to content

கொட்டும் மழையில் கையில் தட்டுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளில் தட்டு ஏந்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியது.

மாற்றுத் திறனாளிக்கான இட ஒதுக்கீட்டை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசாணை எண் 24ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளில் தட்டு ஏந்தி கொட்டும் மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து, தஞ்சை பனகல் கட்டடம் முன்பு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு ஆண்டுக்குள் சிறப்பு ஆட்சியமைப்பு தேர்வு நடத்தி பின்னடைவு காலி பணியிடங்களில் நான்கு சதவீதம் மாற்றுத்திறனாளிகளை அமர்த்த வேண்டும் என்கிற அரசாணை 20 ஐ அமல்படுத்த வேண்டும். பின்னடைவு காலிப்பணியிடங்கள் இல்லை என கூறி எங்களை பாதிக்கும் வகையில் உள்ள அரசாணை 24ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளில் தட்டு ஏந்தி கொட்டும் மழையில் நனைந்தபடி கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் பெண்கள் உள்பட 100 பேர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!