Skip to content

பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள் மட்டும் எளிதாக பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா நகர பேருந்துகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆகியோர் இன்று அண்ணா நகர், திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் பேருந்து நிலையம், பால்பண்ணை நால்ரோடு பேருந்து நிறுத்தம், ஆகிய இடங்களில் 4 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன், புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் முகமது நாசர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. என். சேகரன்,முன்னாள் மண்டல குழு தலைவர் மதிவாணன் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா , மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!