Skip to content

ராமஜெயம் கொலை வழக்கு.. திருச்சி காவேரி தியேட்டரில் டிஐஜி வருண்குமார் விசாரணை

  • by Authour

திமுக அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு இதே நாள் மார்ச் 29ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே நடைபயிற்சிக்கு வந்தபொழுது கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு திருச்சி கல்லணை அருகே உடல் வீசப்பட்டு இருந்தது.

இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அப்போது திருச்சி மாநகர காவல்துறை தனிப்படைகளை அமைத்து தேடிவந்தனர். அதற்கு அடுத்ததாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு ராமஜெயத்தின் மனைவி லதா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இவ்வழக்கு விசாரணையை தற்போது டிஐஜி வருண்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள சுடலைமுத்து மூன்று கொலை வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவரிடம் நேரடியாக 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட்டார். மேலும் புழல் சிறையில் ரவுடி குணாவிடமும் விசாரைண நடத்தப்பட்டது. ரவுடி சுடலைமுத்து ராமஜெயம் கொலை நடந்த சமயத்தில் திருச்சி மத்திய சிறையில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் பயன்படுத்திய செல்போனின் சிம்கார்டு யார் கொடுத்தது என்பதன் அடிப்படையில் ராமஜெயம் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் தலைமையிலான குழுவினர் நேற்றிரவு திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள காவேரி திரையரங்கில் அங்கிருந்த சிலரிடம் விசாரணை நடத்தினர். அந்த கால கட்டத்தில் கடந்த 2012ம் ஆண்டு காலத்தில் காவேரி தியேட்டர் அதிமுக பிரமுகர்களுக்கு சொந்தமானது என கூறப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!