தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதிஸ்டாலினின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி, அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. சிறப்பு முகமை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிறு வியாதி முதல் பெரிய வியாதி வரை சிகிச்சையளித்தனர். ரூபாய் 10,000 முதல் 15,000 வரை செலவாகும் இசிஜி, இருதய எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக எடுக்கப்பட்டதுடன், ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கினர். முகாமில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை, பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் மற்றும் திமுக அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இது குறித்து முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் கூறுகையில், வருடத்திற்கு ஒரு முறை இதுபோல் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றனர்.

