தஞ்சாவூர் – கும்பகோணத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்.
நீதிமன்றங்களில் உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் இ

து நடைமுறைக்கு வந்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இந்த கோரிக்கை வலியுறுத்தி தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

