PM KISAN திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா 2,000 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய விவசாய அடையாள எண்ணை பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.

