திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 51 நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், 30-வது வார்டு சிவசக்தி நகரில், திருப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படும் பகுதி நேர நியாய விலை கடையை, குத்துவிளக்கு ஏற்றி எம்.எல்.ஏ நல்லதம்பி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் பொதுமக்களின்

வசதிக்காக 51 நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் எளிதாக மக்களை சென்றடையும் என்றும் கூறினார்.
மேலும், “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் முதியோர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளதால், அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் சங்கீதா வெங்கடேசன், நகர செயலாளர் ராஜேந்திரன், 30-வது வார்டு நகர கவுன்சிலர் ஜீவிதா பார்த்திபன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

