Skip to content

ரேசன் கடை ஊழியரை தாக்கிய நடிகர் பிரதீப் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ரேஷன் கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பிரதீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், மதுபோதையில் வீரராகவன் தெருவிலுள்ள ரேஷன் கடை ஊழியர்களான கலையரசன் மற்றும் டேனியலுடன் தகராறு செய்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப்பை சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!