Skip to content

கடும் குளிரால் தொழிலாளி உயிரிழப்பு

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அடுத்துள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (57), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 16-ம் தேதி இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டிற்குள் படுத்திருந்தபோது, திடீரென கடுமையான குளிரை தாங்க முடியாமல் நடுங்கி கொண்டிருந்தார்.
பிறகு சிறிது நேரத்தில் அவருக்கு ஜன்னி (வலிப்பு) ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பழனிசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!