திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட்) திருச்சி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் வே. சரவணன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் , வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ் பாபு, நடராஜன்,துணை மேலாளர் கள் ராமநாதன், புகழேந்தி ராஜ், கார்த்திகேயன், உதவி பொறியாளர் ஹரித்,சாலை போக்குவரத்து நிறுவனம் செல்வம், மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியானது திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தொடங்கி சாலை வழியாக திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் ரவுண்டானா அருகில் சென்றடைந்தது. முன்னதாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முதலுதவி பெட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கல்லூரி மாணவ மாணவிகள் சென்றனர்.

