Skip to content

பொள்ளாச்சியில் திமுகவினர் அரங்கேற்றிய மேடை நாடக நிகழ்ச்சி…பாராட்டு

தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் விளையாட்டு மேம்பாடு அணி மற்றும் பொள்ளாச்சி வடக்கு நகர திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்,சமுதாய சமபந்தி விருந்து,கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இந்நிலையில் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில்,பொள்ளாச்சி வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில்,

பொதுமக்களிடையே திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் விதமாகவும், மேலும் கலைஞர் கருணாநிதியின் படைப்புகளை நவநாகரிக சிந்தனைகளுடன், நவீன படைப்புகளாக மாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மேடை நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.தூக்கு மேடை மற்றும் அணில் குஞ்சு ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற இந்த மேடை நாடகம் இளைஞர்களால் அரங்கேற்றப்பட்டது. தமிழ் மொழிக்கு கலைஞர் கருணாநிதி கொடுத்த முக்கியத்துவத்தின் அடிப்படையில், தமிழ் மொழி எப்போதும் அழியாது என, மொழி பற்றை அரங்கேற்றியும், தமிழ்

மொழியின் ஆழத்தை தற்போதைய சூழ்நிலைகளோடு இயைந்து, திமுகவின் தமிழ் மொழி பற்று குறித்து நாடகத்தில் அரங்கேற்றினர்.மேலும் மதசார்பின்மையை போற்றும் விதமாக மத நல்லிணக்கத்தோடு திமுகவினர் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதைத் தத்ரூபமாக மேடையில் நாடகமாக நடித்துக் காட்டினர்.பொதுமக்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் நடைபெற்ற விழிப்புணர்வு மேடை நாடக அரங்கேற்றத்தை பொதுமக்கள் ரசித்துப் பார்த்து பாராட்டினர்

error: Content is protected !!