திருச்செந்தூர் மாவட்ட தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் பேசிய கருத்துகள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. வன்முறையாக நடிக்கும் நடிகர்களுக்கு (நடிகர் விஜய்) மாணவர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவது குறித்து அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார். “கரூரில் 41 பேரை கொன்ற ஒருவனுக்கு ஆதரவு அதிகரிப்பது ஏன்?” என கேள்வி எழுப்பிய அவர், இளைஞர்கள் சினிமா மோகத்தை தவிர்த்து பாரம்பரிய விழுமியங்களை போற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

