கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழவெளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் 24.
இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு மது போதையில் வந்துள்ளார்.
அப்போது முருக உடையார் என்பவரின் கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட பகுதி பொதுமக்கள் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்..
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி இளைஞரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். மதுபோதையில் இளைஞர் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

