Skip to content

அரியலூர்-பசுபதீஸ்வரர் கோவிலில் அம்மன் தாலிகள் திருட்டு-பரபரப்பு

அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற சூரியன் ஆண்டுக்கு இரண்டு முறை சிவபெருமானை வழிபடும் தலமான காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர்
கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலிகள் திருட்டுபோன சம்பவம் பெண் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது பசுபதீஸ்வரர் சிவன் கோயில். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். ஆண்டுக்கு இரண்டு முறை சூரிய ஒளி கோயில் கருவறையில்

உள்ள சிவலிங்கத்தின் மீது பட்டு ஒளிவீசுவதால், சூரிய பகவான் சிவபெருமானை வழிபடுவதாக இத்தளத்திற்கு வரலாறு உண்டு.
வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் நேற்று இரவு மர்ம நபர்கள், கோயில் உள்ள கதவை உடைத்து, கம்பிகளை அறுத்து, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த மூன்று தங்க தாலிகளை ( ஒரு கிராம்

அளவிலான மூன்று தாலிகள்) திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலிகள் திருட்டுப் போன சம்பவம் பெண் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த 15 தினங்களுக்குள் அரியலூரில் ஜமீன்தார் வம்சத்திற்கு குலதெய்வம் கோவிலான ஒப்பிலாத அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு முயற்சி, இலையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கோவிலில் மரகத லிங்கம் திருட்டு, தற்பொழுது வரலாற்று புகழ் பெற்ற காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலிகள் திருட்டு என, பழமை வாய்ந்த கோவில்களில் நடைபெறும் திருட்டுக்கள், பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!