Skip to content

நானும்-வைகோவும் ஒரே யுனிவர்சிட்டி தான்-திருச்சியில் முதல்வர் பேச்சு

திருச்சியில் வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. தமிழ்நாட்டில் வைகோவின் கால்தடம் படாத இடமே இல்லை.

2026ம் ஆண்டில் என்னுடைய முதல் நிகழ்ச்சி வைகோவின் சமத்துவ நடைபயணம்.

அவரின் நெஞ்சுரத்தையும், வேகத்தையும் பார்க்கும் போது 28 வயது இளைஞர் போல் தோன்றுகிறது.

தள்ளாத வயதிலும் தளராமதல் போராடியவர் தந்தை பெரியார்.

2026 ம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக வைகோவின் நடைபயணம் அமைந்துள்ளது.

இதுபோன்ற நடைபயணங்களை மக்களை சென்றடைவதற்கான எளிய வழி.

நானும் வைகோவும் திராவிட யுனிவர்சிட்டி மாணவர்கள்.

திராவிட இயக்கம் இளைஞரின் நலம் எதிர்கால வளர்ச்சியின் இயக்கமாக செயல்பட்டு வருகிறது.

திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது இல்லை. அது தமிழ் மொழியை காக்கக்கூடியது.

சமத்துவ நடைபயணத்தில் பங்கேற்பவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்துள்ளார் வைகோ.

போதைப்பொருள் நெட்வொர்க்கை ஒழிக்க மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

திராவிட இயக்கம் இளைஞரின் நலன், எதிர்கால வளர்ச்சியின் இயக்கமாக செயல்பட்டு வருகிறது.

போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை காக்க வேண்டும்.

போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இளைஞர் படையுடன் சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார் வைகோ.

பெற்றோர் ஒப்புதலுடன் இளைஞர் படையை நேர்முகத் தேர்வு வைத்து தேர்ந்தெடுத்தவர் வைகோ.

போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல் படவேண்டும்.

வைகோவின் இந்த நடைபயணம் சமூகத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இவ்வாறு தெரிவித்தார்

error: Content is protected !!